1.

சரியான கூற்றினை தெரிவு செய்கஅ) மணி கடைக்கு போவாயா ? என்ற கேள்விக்கு போவேன் என்று உடன்பட்டுக் கூறல் மறை விடையாகும்ஆ) இது செய்வாயா ? என்று வினவியபோது "நீயே செய்" என்று ஏவிக் கூறுவது சுட்டுவிடையாகும்

Answer»

இர‌ண்டு கூ‌ற்றுகளு‌ம் தவறானவை ஆகு‌ம்.  

விடை

  • கே‌ட்‌க‌ப்பட்ட ‌வினா‌வி‌ற்கான கூற‌ப்படு‌ம் சொ‌‌‌ல்லே ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  

நே‌ர் ‌விடை

  • தொடு‌க்க‌ப்ப‌ட்ட ‌வினா‌வி‌ற்கு உட‌ன்படுவதாக அமை‌ந்த ப‌தி‌லினை உரை‌த்த‌ல் நே‌ர் ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.

(எ.கா)

  • மணி கடைக்கு போவாயா ? என்ற கேள்விக்கு போவேன் எ‌ன்ற உட‌ன்படுவதாக அமை‌ந்த ப‌தி‌லினை கூறுவதா‌ல் இது நே‌ர் ‌விடை ஆகு‌ம்.  

ஏவ‌ல் ‌விடை

  • மாட்டே‌ன் எ‌ன்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ஏவ‌‌ல் ‌விடை என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.

(எ.கா)

  • இது செய்வாயா ? என்று வினவிய போது நீயே செய் என்று மாட்டே‌ன் எ‌ன்று மறுப்பதை ஏவுதலாகக் கூறுவதா‌ல் இது ஏவ‌ல் ‌விடை ஆகு‌ம்.  


Discussion

No Comment Found