InterviewSolution
| 1. |
மின்னணுப் புரட்சியை விளக்குக? பாயிண்ட் மூலமாக தமிழில் விடை தரவும் ப்ளீஸ்.. |
|
Answer» மின்னணு புரட்சி ஒரு நூதன நிகழ்வாக நீண்ட காலத்திற்கு முன்பே துடிப்புடன் ஆரம்பித்தது. ஆனால், அதன் வேகம் படிப்படியாக அதிகரித்தது. இதனால் உருவான மாற்றங்கள் கண்ணுக்குப் புலப்படாத அளவிற்கு மிகவும் நுட்பமானவையாக இருந்தன. ஆரம்ப காலத்தில் மின்னணு முன்முயற்சிகள் பதிவேடுகளைப் பாதுகாப்பதற்காகவும், அலுவலக நிர்வாகத்திற்காகவும், தரவுகளை ஆராயவும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக மின்னணுப் புரட்சி பல்வேறு வாய்ப்புகளுக்கான மூலங்களைக் கண்டறிந்து வளர்ச்சிக்கான வழிமுறைகளை மறுவரையறை செய்திருக்கிறது. இணையத்தில் தொடங்கி செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் வரையிலும் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சமூக, பொருளாதார சீரமைப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இதனால், இந்தியா உலகில் பொருளாதார வளர்ச்சியை மிக விரைவாகக் கண்டுவரும் நாடாக ஆக முடிந்தது. தொடர்புகளை மேம்படுத்தும் சீர்மிகு தொழில்நுட்பங்கள், தொழில்கள், அரசாங்கம், சமூகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக மாறியது. மக்கள் ஒருவரோடு ஒருவர் இடைவினைகளை மேற்கொள்வதிலும், தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் நலவாழ்வையும், நிதியையும் நிர்வகிப்பதிலும் மிகுதியான தாக்கத்தை இது ஏற்படுத்தியது. Explanation: |
|