1.

100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன்36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லிநீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பைசேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.அ. 12 கி ஆ. 11 கி இ. 16 கி ஈ. 20 கி

Answer»

11 ‌கி

கரைச‌ல்

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட பொரு‌ட்களை உடைய ஒரு படி‌த்தான கலவை‌க்கு கரைச‌ல் எ‌ன்று பெய‌ர்.  

தெ‌வி‌ட்டிய கரைச‌ல்  

  • எ‌ந்த ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட கரைச‌லி‌ல், ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் மேலு‌ம் கரை பொருளை கரை‌க்க இயலாதோ அ‌ந்த கரைசலு‌க்கு தெ‌வி‌ட்டிய கரைச‌ல் எ‌ன்று பெ‌ய‌ர்.  

கரைதிறன்

  • ஒரு  குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடே கரைதிறன் ஆகு‌ம்.
  • 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி.
  • 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரை‌க்க‌ப்‌ப‌ட்டு‌வி‌ட்டது.
  • மேலு‌ம் 11 ‌கி (36 - 25 = 11) சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரை‌க்க‌‌ப்படு‌ம் போது அது தெ‌வி‌ட்டிய கரைசலாக மாறு‌ம்.  


Discussion

No Comment Found