1.

3. குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள்என்றழைக்கப்படுவது ஏன்?

Answer»

லிகள்  ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவத‌‌ன் காரண‌ம்:அனைத்து சீலென்டிரேட்டுகள் அல்லது குழியுடலிகளும் நீரில் வாழ்வன.  இவைகள் பெரும்பாலும் கடலில் வாழும் உயிரினங்களாகும். உடல் ஆரச்சமச்சீருடையது. உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு. எனவே இது -ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வடுக்குகளுக்கிடையே  காணப்படும் அடர் கூழ்மம் போன்ற பொருள் மீசோகிளியா (செல்களால் ஆக்கப்படாத) எனப்படும். இவற்றில் பல்லுருவ அமைப்பைக் கொண்டுள்ள பல குழியுடலிகள் காணப்படுகின்றன. அவற்றில் பாலிப் மற்றும் மெடுசா எனும் இரு உருவ அமைப்புகள் பொதுவாக காணப்படுகின்றன. இவற்றில் கொட்டும் செல்கள் அல்லது நிமட்டோசிஸ்ட்கள்(நிடோபிளாஸ்ட்கள் – (CNIDOBLASTS)  புறப்படையில் அமைந்துள்ளன. நிடோசில் (Cnidocil) எனும் கொடுக்கும் பெற்றிருப்பதனாலேயே  இவை நிடோரியா என்றும் அழைக்கப்படுகிறது.



Discussion

No Comment Found