InterviewSolution
| 1. |
9. நீ அறிந்த கவிஞர் ஒருவரைப் பற்றி அரைப்பக்க அளவில் கட்டுரை வரைக(குறிப்பேட்டில் எழுதுக.)10. உனக்குத் தெரிந்த பாரதியார் பாடல் ஒன்றனை எழுதுக.விடை: |
Answer» 9) ANSWER
நான் விரும்பும் கவிஞர் - பாரதியார்முன்னுரை:அச்சமில்லை அச்சமில்லை என்று, தம் கவிதைகள் மூலம் நம்மிடையே விடுதலை உணர்வை ஊட்டிய மகாகவி பாரதியாரே நான் விரும்பும் கவிஞர் ஆவார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இயற்றிய நூல்கள்:பாரதியார் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, ஞானரதம், புதிய ஆத்திச்சூடி, சந்திரிகையின் கதை, தராசு போன்ற நூல்களை இயற்றியுள்ளார். சிறப்புப் பெயர்கள்:பாரதியார், முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்திதாசன் என்று சிறப்புப் பெயர்களால் வழங்கப்பட்டார். கவிஞராக, செய்தியாளராக, பத்திரிகை ஆசிரியராக, விடுதலை வீரராக, தமிழாசிரியராக விளங்கியவர் பாரதியார். முடிவுரை:நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என்று புகழ்பெற்ற பாரதியார் 11-09-1921 அன்று இம்மண்ணை விட்டு மறைந்தார். ஆனால் அவரின் புகழ் இன்றும் என்றும் நிலைத்திருக்கும்.
|
|