Answer» ஆக்ஸிஜன் ஒடுக்கிஅலுமினியம் - அலுமினியம் ஆனது புவியில் மிகச் செறிந்து காணப்படும் உலோகம் ஆகும்.
- அலுமினியத்தின் மிக அதிகமான வினைபடும் திறனை பெற்றுள்ளதால் அது எப்போதும் சேர்ந்த நிலையிலேயே காணப்படும்.
- அலுமினியத்தின் முக்கிய தாது பாக்சைட் ஆகும்.
- பாக்சைட்டிலிருந்து அலுமினியம் பேயர் மற்றும் ஹால் முறைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.
அலுமினிய வெப்ப ஒடுக்க வினை - இரும்பு ஆக்சைடு மற்றும் அலுமினியம் பவுடர் கலந்த கலவை சூடாக்கப்படுகிறது.
- இந்த வினையில் அலுமினியம் ஆக்சிஜன் ஒடுக்கியாக செயல்பட்டு, இரும்பு ஆக்சைடை இரும்பாக ஒடுக்கம் அடையச் செய்கிறது.
- இந்த வினைக்கு அலுமினிய வெப்ப ஒடுக்க வினை என்று பெயர்.
- FE2O3 + 2 Al → 2 Fe + Al2 O3 + வெப்ப ஆற்றல்.
|