| 1. |
Annamitta Kai essay in Tamil |
|
Answer»
முன்னாள் முதலமைச்சர், காற்றில் கலந்த கதாநாயகி, மறைந்த தமிழகத்தின் ஆளுமை...இவை அனைத்துக்கும் ஒரே பதில் ஜெயலலிதா. இப்படி பல்கலை வித்தகரான ஒரே இரும்பு பெண் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை அவரது தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் நினைவுக்கூற வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். ஏனெனில் ஜெயலிதாவை இன்றும் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வாழும் பெண்களுக்கு ஜெ.வின் நினைவுநாள் என்றுமே கருப்பு தினம் தான். ஜெயலலிதா அரசியல் ஆளுமை மட்டுமல்ல, நடிப்பின் சிற்பங்கள்... முன்னாள் தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க கட்சியின் தலைவராகவும் மட்டும் விளங்கவில்லை தமிழ் நடிகையாகவும் தமிழ் திரைப்பட துறையில் ஜொலித்துள்ளார் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவரும் எம்.ஜி. ஆரும் இணைந்து நடித்த படங்களுக்கு ரசிகர்கள் இன்றும் வரிசைக்கட்டி நிற்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 140 க்கும் அதிகமான படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார். எம்.ஜி. ஆர் ஜெயலிதாவுக்கு அரசியலில் ஆசானாகவும், திரைத்துறையில் குருவாகவும் இருந்தார் எனக்கூறினால் மிகையாகாது. |
|