1.

சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி________ ஆகும்.

Answer»

சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி பைலோரஸ் ஆகும். இரைப்பையானது தசையாலான அகன்ற உறுப்பாகும்.  இது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே ‘J’  வடிவத்தில் காணப்படுகிறது.  இரைப்பை நீரானது இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படுகிறது. இந்த இரைப்பை நீர் நிறமற்றது.மேலும் இது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை கொண்டுள்ளது.அது அதிக அமிலத் தன்மை உடையது.  இவற்றில் ரென்னின் மற்றும் பெப்சின் என்ற இரு  நொதிகளும் காணப்படுகின்றன.இது செயலற்ற நிலையில் உள்ள பெப்சினோஜனை, செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது. உணவோடு  சேர்த்து விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை ஹைட்ரோகுளோரிக் அமிலமானது அழித்துவிடுகிறது. இரைப்பைப்பாகு என்பது இரைப்பையில் சுரக்ககூடிய இரைப்பை நீர் மற்றும் கடையப்பட்ட உணவும் சேர்ந்து, அரை செரிமான நிலையில் உணவு மாறியிருப்பதாகும். இந்த இரைப்பைப்பாகு சிறுகுடலுக்குள் மெதுவாக குடல்வாய் அல்லது பைலோரஸ் வழியாக செல்கிறது.



Discussion

No Comment Found