InterviewSolution
| 1. |
சிறுநீர் கழிக்க வேண்டும் என்றதூண்டுதலை எவ்வாறு கட்டுப்படுத்த முடிகிறது? |
|
Answer» நீர்ப்பை: சிறுநீர்ப்பை ஆனது ஒரு பை அமைப்பினை உடையது. சிறுநீர்ப்பை ஆனது வயிற்றுப் பகுதியில் இடுப்புக்குழி என்ற இடத்தில் உள்ளது. இது தற்காலிகமாக சிறுநீரை சேமித்து வைக்கும் இடம் ஆகும். சிறுநீர்ப்பை நிறைந்ததால் ஏற்படும் உந்துதலால் நாம் சிறுநீரை வெளியேற்றுகிறோம். புறவழியைச் சுற்றி அமைந்து உள்ள சுருக்கு தசைகள் மூடிய நிலையில் இருக்கும்போது சிறுநீர் வெளியே வராமல் தடுக்கப்படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது மட்டும் இந்த சுருக்கு தசைகள் விரிவடைவதால் சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.இந்த சுருக்கு தசைகள் இயக்கு தசைகள் ஆகும். அதாவது நம் இச்சையினை ஏற்கும் தசை ஆகும். எனவே நம்மால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதலை கட்டுப்படுத்த முடியும். |
|