CNS – ன் விரிவாக்கம்CENTRALNERVOUS System (மைய நரம்பு மண்டலம்) ஆகும்.
மைய நரம்பு மண்டலம் (CNS), புற அமைவு நரம்பு மண்டலம் (PNS) மற்றும் தானியங்கு நரம்பு மண்டலம் (ANS) முதலியனவற்றினை உள்ளடக்கியதாக முயலின் நரம்பு மண்டலம் செயல்படுகிறது.
மூளை மற்றும் தண்டுவடம் ஆகிய இரு பகுதிகளும் மைய நரம்பு மண்டலத்தில் காணப்படுகின்றன.
12 இணை மூளை நரம்புகள் மற்றும் 37 இணை தண்டு வட நரம்புகள் புற அமைவு நரம்பு மண்டலத்தில் அமைந்து உள்ளது.
தானியங்கு நரம்பு மண்டலம் ஆனது பரிவு மற்றும் இணைப் பரிவு நரம்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.