InterviewSolution
| 1. |
சரியாகப் பொருந்துவதைத் தேர்ந்தெடு;அயனிச் சேர்மங்களின் பொதுவான பண்புகள்அ. இவை அறை வெப்பநிலையில் வாயுக்கள்ஆ. இவை கடினமான மற்றும் நொறுங்கும் தன்மை கொண்டவைஇ. இவை மூலக்கூறு வினைகளுக்குட்படுகிறது. ஈ. இவற்றின் உருகுநிலை குறைவு. |
|
Answer» ரியான பதில் (ஆ) ஆகும். இவை கடினமான மற்றும் நொறுக்கும் தன்மை கொண்டவை. இது காணப்படும் இடமானது அயனிச்சேர்மங்கள் ஆகும். அயனிச்சேர்மங்கள்: மூலக்கூறுகளின் பண்புகள் மூலக்கூறுகளில் உள்ள அணுக்களுக்கிடையேயான பிணைப்பின் தன்மையே நிர்ணயிக்கும் முக்கிய காரணி ஆகும். அயனிச் சேர்மம் என்பது அயனிகளின் பிணைப்பைக் கொண்டுள்ள சேர்மங்கள் ஆகும். அயனிச்சேர்மங்களின் பண்புகள்: அயனிச்சேர்மங்கள் அடர்த்தி, கடினத்தன்மை மற்றும் நொறுங்கும் தன்மைக் கொண்டது. இதில் உள்ள அணுக்கள் வலிமையான நிலைமின் கவர்ச்சி விசையால் அயனிகள் பிணைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், இது அதிக கடினத்தன்மையும், அடர்த்தியையும் கொண்டிருக்கும். ஆனால், இது எளிதில் நொறுங்கி விடும் தன்மை வாய்ந்தது. இவை அனைத்துப் பண்புகளையும் அயனிச்சேர்மங்கள் பெற்றிருக்கின்றன. |
|