InterviewSolution
| 1. |
எலும்பு இணைப்பு திசு என்றால் என்ன?எப்படி அவை நமது உடல் செல்கள் செயல்பட உதவுகிறது |
|
Answer» இணைப்பு திசுஎலும்பு என்பது மனிதனுக்கு தேவையான மிக இன்றியமையாத உறுப்புகளுள் ஒன்றாகும். ஏனெனில் எலும்பானது மனிதனை தாங்குவது மற்றும் நகர்வது ஆகிய பணிகளைச் செய்கிறது. எலும்புகளில் காணப்படும் திசுவானது எலும்புத் திசு என்று அழைக்கப்படுகிறது. கால்சியம் என்னும் தாதுப்பொருளானது எலும்புகளில் சேமித்து வைக்கப்படுகிறது. எனவே எலும்புகள் உறுதியாக வைத்திருக்க கால்சியம் தேவைப்படுகிறது. எலும்பு மற்றும் தசையானது நமது உடலில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய காரணமாகும். எலும்புத் திசு இது திடமான விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்பு சட்டக இணைப்புத் திசு.செயல்பாடுகள் : எலும்பு இணைப்புத்திசுவானது உடலுக்கு வடிவத்தையும், கட்டமைப்பையும் கொடுக்கிறது. மென்மையான திசுக்களுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும், பாதுகாப்பையும் கொடுப்பது எலும்பு இணைப்புத்திசுவாகும். |
|