InterviewSolution
| 1. |
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவைசிற்றிடை இணைப்பு திசுவின்இருவகையாகும். |
|
Answer» மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்.மேலே உள்ள தவறு. எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை எலும்பு இணைப்பு திசுவின்இருவகையாகும். குருத்தெலும்பு இவை இயற்கையில் மிருதுவான, அரை விரைப்பு தன்மையுடைய, இளக்கமான மற்றும் குறைந்த நாளம் கொண்டது ஆகும். பெரிய குருத்தெலும்பு செல்களான கான்ட்ரோசைட்டுகளை மேட்ரிக்ஸ் கொண்டுள்ளது. குருத்தெலும்பு முக்கு நுனி, வெளி காது, நீண்ட எலும்பின் முடிவுப்பகுதி, தொண்டை மற்றும் குரல்வளையில் உள்ளது. எலும்பு இது திடமான, விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்புச் சட்டகத் திசு ஆகும். இதில் எலும்பச் செல்கள் உள்ளன. இவை உடலுக்கு வடிவத்தையும் கட்டமைப்பினையும் அளிக்கின்றன. எலும்புகள் மென் திசுக்களுக்கும் உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும் பாதுகாப்பினையும் அளிக்கின்றன. |
|