Answer» எராஸ்மஸ் என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.பெட்ரார்க் [கி.பி. 1304 - கி.பி. 1374] - பெட்ரார்க் என்பவர் மனித நேயத்தைத் தன்னுடைய படைப்புகளில் முதலில் ஏற்று உள்வாங்கிக் கொண்டு, அது தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர்ஆவார்.
- அதனால் பெட்ரார்க் ‘மனித நேயத்தின் தந்தை ’ என்று அழைக்கப்படுகிறார்.
- இவருக்கு முன்னரும் கூட, செவ்வியல் இலக்கியங்களினால் தாக்கத்திற்குட்பட்டவரான தாந்தே , ‘டிவைன் காமெடி’ என்ற நூலை எழுதியிருந்தார் .
- மாக்கியவெல்லி ‘இளவரசன்’ (The PRINCE) என்ற தலைப்பில் அரசியல் ஆய்வு ஒன்றை எழுதினார்.
- இந்தப் புத்தகத்தில், ஓர் அரசன் கட்டாயம் பெற்றிருக்க வேண்டிய நற்பண்புகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.
- ஓர் அரசன் என்பவன் ஒரே சமயத்தில் சிங்கமும், நரியுமாக விளங்க வேண்டுமென்று அவர் அறிவித்தார். அவரைப் பொறுத்தவரை ,வழிமுறைகளைக் காட்டிலும் முடிவு தான் மிகவும் முக்கியமானது.
- மனித நேயவாதிகளிடையே ஓர் இளவரசனாக அறியப்பட்டவரான எராஸ்மஸ் கி.பி. 1466 - கி.பி. 1536, மடமையின் புகழ்ச்சி (In PRAISE of FOLLY) என்றொரு நையாண்டி நூலை எழுதினார்.
- திருச்சபை நடவடிக்கைகள் ,சடங்குகள் பற்றிய புத்தகம் இது. இங்கிலாந்தைச் சேர்ந்த சர் தாமஸ் மூர், ‘உட்டோப்பியா’ என்ற ஒரு நையாண்டி நூலை எழுதினார்.
|