InterviewSolution
| 1. |
ஹைதர் அலி உண்மையான அரசனானதை விளக்குக. |
|
Answer» லிஹைதர் அலி அவர்கள் 100 குதிரைப்படை வீரர்கள் மற்றும் 2000 காலாட்படை வீரர்களை நிர்வகிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த பொறுப்பை 1755 ஆம் ஆண்டிற்குள் கொண்டவராக திகழ்ந்தார்.மைசூரில் இராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஹைதர் அலி அவர்கள் ஒடுக்கினார்.ஹைதர் அலி அவர்கள் மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை மீட்டெடுத்தார். இதன் காரணமாக ஹைதர் அலி அவர்கள் ஃபதே ஹைதர் பகதூர் (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டத்தினை பெற்றார்.தனது சொந்த மண்ணில் மராத்தியரால் உருவாக்கப்பட்ட சதித் திட்டத்தை எதிர்கொண்ட ஹைதர் அதை வெற்றிகரமாக முறியடித்தார். உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை வெற்றிகரமாக கையாண்ட பின் ஹைதர் அலி உண்மையான அரசராக கருதப்பட்டார். |
|