|
Answer» இ-பப் (அ) மின் பதிப்பு - நவீன மின்னூல்களை வெளியிடுவதற்காக, அனைத்துலக மின்பதிப்பு குழுமத்தினால் உருவாக்கப்பட்ட கட்டற்ற திறந்தவெளி மின்தரம் இ-பப் (அ) மின் பதிப்பு என அழைக்கப்பட்டது.
இ-பப் அமைப்பில் சேர்க்கப்பட்ட சிறப்பான வசதிகள் எழுத்துரு மாற்றத்தோடு வரிகளின் மறுவோட்டம் - மின் நூலில் எழுத்துரு மற்றும் எழுத்துருவின் அளவு ஆகிய இரண்டையும் மாற்ற இயலும். எழுத்துரு மற்றும் அளவு மாறும் போது வரிகளின் அளவு மற்றும் பக்கத்தின் எண்ணிக்கை மாறுவது இதன் சிறப்பு ஆகும்.
நூலைப் பற்றிய விவரக் குறிப்பு - மின் பதிப்பு ஆனது நூலின் பெயர், ஆசிரியர், பதிப்பு எண், பதிப்பகத்தின் பெயர், பதிப்பிக்கப்பட்ட நாள் முதலியனவற்றை நூலிலேயே சேர்த்து விவரத்தினை மட்டும் அறியும் வசதியை தருகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட நோக்குநிலை - வாசிப்பரின் நோக்குநிலைக்கு ஏற்ப நூலும் மாற்றியமைக்கப்படும்
|