1.

I want a poem in tamil for a recitation if you can be send a poem written or picture but in tamil.ஒரு கவிதையை தமிழில் எழுத வேண்டுமென்றால் நீங்கள் ஒரு கவிதையை எழுதலாம் அல்லது படம் அனுப்பலாம்.

Answer»

நாள் பார்த்து, நாற்று நட்டு,

கடன் பட்டு, களை பறித்து,

பொய்யாது பொய்க்கையிலே,

வானம் பார்த்து கூப்பி நின்று ..,

நில்லாது பொழியயிலே,

கடன் எண்ணி, கலங்கி நின்று ..,

நிறைமாத கடும் தவம் போல்,

வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி,

நாள் பார்த்து, கதிர் அடித்து,

தரை பரப்பி, தரம் பிரித்து,

களம் காணும் புது நெல்லை ..,

வண்டிக்கட்டி, மாடுபூட்டி,

கனாக்கண்டு சந்தை சேர்த்தால்,

கரை வேஷ்டி தரகன் சொல்வான்,

மொத்தமும் பன்னிறு ஆயிரம் பெறும்!

அரை ஆடை, வெருங்காலுடன்,

ஒடுங்கி நின்ற அத்தேகம்,

நடுங்கி நின்று எண்ணும்போது ..,

பட்ட கடன் பதிணொராயிரம்,

வண்டிச் சத்தம் ஓராயிரம்,

ஒருவேளை பசியாரி,

கால் கடுக்க சேற்றிலும்,

அனல் தகிக்கும் மேட்டிலும்,

வியர்வையாய் சிந்திய ரத்தம்,

விட்டுச்சென்றது,

கடனடைத்த பின் தங்கும்,

கொடித்துணியும் கோவணமும் ..!

பாவம் பார்த்த வண்டிக்காரன்,

விட்டுச்சென்ற சொச்சச் சில்லரை,

அடுத்தாண்டு விளைச்சலுக்கா ..?

ஒரு புட்டி விஷத்துக்கா ..?







Discussion

No Comment Found