இலா என்ற இந்த மென்பொருளை பாரத ஸ்டேட் வங்கி உரையாடு மென்பொருள் உருவாக்கியுள்ளது.
அதாவது இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அவர்கள் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு இது பதில் அளிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.
அவர்களுக்கு கூடிய சந்தேகங்கள் அத்தனைக்கும் இதில் அவர்கள் கேள்வி எழுப்ப இது அத்தனைக்கும் பதில் கொடுக்கும்.
எந்த அளவிற்கு என்றால் இந்த இலா என்கின்ற மென்பொருள் ஒரு வினாடிக்கு 10,000 வாடிக்கையாளர்களுடன் உரையாடும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதாக கூறப்படுகிறது.
இது இந்த வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவையை இணையம் மூலமாக வழங்குகிறது.
இதன்மூலமாக பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களிடம் நல்ல நன்மதிப்பை பெறுவதோடு அவர்களுக்கான சேவையை நல்ல முறையில் கொடுக்கும் வங்கி என்ற பெயரையும் இதன்மூலமாக பெற்றுள்ளது.