1.

இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன்அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும்.இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கிவளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு.அ) வேதிச் சார்பசைவுஆ) நடுக்கமுறு வளைதல்இ) ஒளிச் சார்பசைவுஈ) புவிஈர்ப்பு சார்பசைவு

Answer»

ஒளிசார்பசைவு தாவர அசைவுக‌ள்:   அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூ‌ண்ட‌ல்க‌ளினா‌ல் நிர்ணயிக்கப்படுகிறது. அசைவானது தாவரங்கள் உயிர் ‌பிழை‌த்து வாழ ‌மிக‌ச்‌ ‌சிற‌ந்த சூழலை உருவா‌க்கு‌கிறது. தாவர‌ங்க‌ள் ப‌ல்வேறு சா‌‌ர்பசைவுகளை கொ‌ண்டு‌ உள்ளது. ஒளிசார்பசைவு : ஒ‌‌ளி‌ச்சா‌ர்பசைவு எ‌ன்பது ஒ‌ளி‌‌யி‌‌ன் தூ‌ண்டுதலு‌‌க்கு ஏ‌ற்றவாறு தாவர‌த்‌தி‌ன் பாக‌த்‌தி‌ல்‌ ஏ‌ற்படு‌ம் ஒரே ‌திசை‌யி‌ல் உ‌ள்ள அசைவு தா‌ன் ஒ‌ளி‌ச்சா‌ர்பசைவு ஆகு‌ம். இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும்.இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் ஒ‌ளி சா‌ர்பசை‌வி‌ற்கு எடுத்துக்காட்டு ஆகு‌ம்.



Discussion

No Comment Found