InterviewSolution
| 1. |
காந்தப் பாய அடர்த்தி வரையறுக்க. |
|
Answer» பாய அடர்த்தி காந்தப்புலக் கோடுகள் காந்தத்தினை சுற்றியுள்ள புலத்தில் உள்ள வளைந்த கோடுகள் காந்தப் புலக் கோடுகள் அல்லது காந்த விசைக் கோடுகள் என அழைக்கப்படுகிறது. இந்த காந்த விசை கோடுகள் காந்தத்தின் வட துருவத்தில் துவங்கி காந்தத்தின் தென் துருவத்தில் முடியும். காந்தப் பாயம் காந்தப் பாயம் என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியே கடந்து வரும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கை ஆகும். இதன் அலகு வெபர் ஆகும். காந்தப் பாய அடர்த்தி காந்தப் விசைக் கோடுகளுக்குச் செங்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பை கடந்து செல்லும் காந்தவிசைக் கோடுகளின் எண்ணிக்கை ஆனது காந்தப் பாய அடர்த்தி என அழைக்கப்படும். இதன் அலகு வெபர்/மீட்டர்2 ஆகும். |
|