1.

காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது.அ. புறணி ஆ. பித்இ. பெரிசைக்கிள் ஈ. அகத்தோல்

Answer»

அகத்தோல்

இரு வித்திலைத் தாவர வேரின் குறுக்கு வெட்டுத் தோற்ற‌ம்  

  • இருவித்திலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டுத் தோற்ற‌‌த்‌தி‌ல்  நான்கு பகுதிகள் உ‌ள்ளன.  
  • அவை எபிபிளமா, புறணி, அகத்தோல், ஸ்டீல் ஆகு‌ம்.

எபிபிளமா

  • எபிபிளமா அல்லது ரைசொடேர்மிஸ் என்பது தாவர வேரின் வெளிப்புற அடுக்குகள் ஆகும்.
  • இதில் புறத்தோல் துளைகள் மற்றும் கியூடிக்கில் காண‌ப்பட‌வி‌ல்லை.

புறணி

  • இது பாரன்கைமா செல்களால் ஆனது.  
  • பார‌ன்கைமா செ‌ல்க‌ள்  பல அடுக்கு செல் இடைவெளிகளுடன் நெருக்கமில்லாமல் காணப்படுகிறது.

அகத்தோல்

  • இது புறணியின் கடைசி அடுக்கு ஆகும்.
  • அகத்தோல் ஒரே வரிசையில் அமையப்பெற்று நெருக்கமாக் காணப்படும் பீப்பாய் வடிவ செல்களால் ஆனது.  
  • காஸ்பரின் பட்டைகள் இதிலுள்ள ஆரச்சுவர்களிலும்  உட்புற கிடைமட்ட சுவர்களிலும் காணப்படும்.


Discussion

No Comment Found