| 1. |
Karumpugai perumpugai tamil essay writing |
|
Answer» புகை என்பது எரிக்கப்படும் எரிபொருள் முழுமையாக எரியாததன் விளைவாக ஏற்படுவதாகும். எரிபொருள் முழுமையும் எரிந்தால் புகை ஏதும் வெளிப்படாது. பெரும்பாலான எரிபொருள்கள் கரியம் எனப்படும் கார்பன், நீர், வாயுவாகிய ஹைட்ரஜன், உயிர்வளியாகிய ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றையும் சிறிதளவு கந்தகம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.சில கனிமங்களின் சாம்பலும் கலந்திருக்கும். இந்த எரிபொருட்கள் முழுமையாக எரிந்து முடித்தால் இறுதி விளைவாக கரியமில வாயு, நீராவி, நைட்ரஜன் ஆகியவை எஞ்சும். இவை தீங்கற்றவைகளாகும். எரிபொருளில் கந்தகமிருந்தால் கந்தக டை ஆக்ஸைடு சிறிதளவு வெளிப்படும். இது காற்றோடு அல்லது ஈரத்தோடு சேரும்போது அரிமான அமிலமாக(CORROSIVE ACID)மாறும். முழுமையாக எரியும்போது எரிபொருளானது உயர் வெப்பத்தில் ஆக்சிகரணத்துக்காக போதிய அளவு காற்றை எடுத்துக் கொள்ளும். இந்நிலைமை கெட்டித்தன்மையுள்ள எரிபொருட்களுக்குச் சரியாக அமையாது. இதனால் அவை புகையை வெளிப்படுத்துகின்றன. |
|