1.

கொடுக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில்சேர்மங்களின் வகையைக் கண்டறிக (அயனி / சக/ ஈதல் சகப்பிணைப்பு)அ. முனைவற்ற கரைப்பான்களில் கரையும்ஆ. வினையின் வேகம் மிக அதிகம்இ. மின்சாரத்தைக் கடத்துவதில்லைஈ. அறை வெப்பநிலையில் திண்மங்கள்

Answer»

களின் வகைகள்அ) முனைவற்ற கரைப்பான்களில் கரையும் – சகப்பிணைப்பு, ஈதல் சகப்பிணைப்பு.  பென்சின் மற்றும் கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற முனைவற்ற கரைப்பான்களில் தான் சகப்பிணைப்புச் சேர்மங்கள் எளிதில் கரையும்.  ஆ) வினையின் வேகம் மிக அதிகம் – அயனிப்பிணைப்பு.  அயனிவினைகளில், அயனிச்சேர்மங்கள் தகுந்த நேரத்தில் தீவிரமாக ஈடுபடுவதால் அவற்றின் வினை வேகமானது அதிகமாக இருக்கும்.  இ) மின்சாரத்தைக் கடத்துவதில்லை - சகப்பிணைப்பு, ஈதல் சகப்பிணைப்பு   சகப்பிணைப்புச் சேர்மங்கள் உருகிய நிலையிலும், கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்தாது.  சகப்பிணைப்புச் சேர்மத்தில் அயனிகள் இல்லாததால் மின்சாரங்களை கடத்த இயலாது.  ஈ) அரை வெப்பநிலையில் திண்மங்கள் – அயனிப்பிணைப்பு  நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் வலிமைமிகு நிலைமின் கவர்ச்சி விசையால் பிணைக்கப்படும் மூலம் உருவாகும். இதனால் அயனிச் சேர்மங்கள் அறை வெப்பநிலையில் படிகத் திண்மங்களாக இருக்கின்றது.



Discussion

No Comment Found