InterviewSolution
| 1. |
குழல் கால்கள் மற்றும் பொய்க் கால்களுக்குஇடையேயான வேறுபாடு யாது? |
|
Answer» ால்கள் மற்றும் பொய்க் கால்களுக்கு இடையேயான வேறுபாடு : குழல் கால்கள் இந்த குழல் கால்கள் நட்சத்திர மீன் என்னும் முட்தோலிகள் தொகுதியில் உள்ளது. இந்த குழல் கால்களின் முக்கிய பணிகள் இடப்பெயர்ச்சி செய்வது, சுவாசத்தலில் ஈடுபடுவது, உணர்வினை அறிவது மற்றும் இறையினை பிடித்தல் ஆகும். இந்த குழல் கால்கள் நிலையானவை, அழியாதவை. பொய்க்கால்கள் பொய்க்கால்கள் போலி கால்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த போலி கால்கள் அமீபா என்னும் ஒரு செல் உயிரியில் உள்ளது. இந்த போலி கால்கள் இடப்பெயர்ச்சி செய்யவும் மற்றும் இறையினை பிடித்தல் போன்ற பணிகளை செய்கின்றன. இந்த போலி கால்கள் நிலையற்றவை. அழியக்கூடியவை. |
|