1.

குறுவினா1. மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறுப்படுகிறது2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?சிறுவினா1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது2. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக,3. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?​

Answer»

ANSWER:

QUESTION 1.

மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?

Answer:

(i) கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது. பெற்றெடுத்த குழந்தைகளின் பசியைத் தீர்க்க முடியவில்லை .

(II) கலப்பை பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, ஏற்றம் இறைப்பவரின் மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர் வேதனைப் படுகின்றனர்.

Question 2.

மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

Answer:

மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை. எனவே மக்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.

Question 3.

கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?

Answer:

•வாளியில் கரைத்த மாவால் வாசலில் கோலம் போட்டனர்.

•இந்தக் கோலத்தைக் கரைக்க மழை வரவில்லை !

•பானையில் மாவைக் கரைத்து, பாதை எல்லாம் கோலம் போட்டனர்.

•அந்தக் கோலம் கரைக்கவும் மழை வரவில்லை .

Question 4.

மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.

Answer:

•கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை பெய்யவில்லை.

•முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை .

•கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை.

•மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை.

Question 5.

மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?

Answer:

•மழைச் சோறு எடுத்தபின், பேய் மழையாக ஊசிபோல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.

•சிட்டுப் போல மின்னி மின்னி ஊரெங்கும் பெய்கிறது.

•ஊரெங்கும் செல்ல மழை பெய்கிறது.

Hope It HELPS!!。◕‿◕。

Please MARK Me Brainiest

Thanks



Discussion

No Comment Found