1.

குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள்நமது உடலின் ………. பகுதியில் உள்ளன.

Answer»

ை கொண்ட எபிதீலிய செல்கள்நமது உடலின் சுவாசப் பகுதியில் உள்ளன. எபிதீலியம் என்பது ஒரு எளிய திசு ஆகும். இந்த எபிதீலிய திசுவானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்கு செல்களால் உருவானதாகும்.இச்செல்கள்  ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக காணப்படுகின்றன.   இந்த எபிதீலிய செல்கள், செல்கள் அற்ற  தாங்கு சவ்வின் மீது அமைந்துள்ளது. கொலாஜன் எனும் சிறப்பான அமைப்பைக் கொண்ட புரதத்தைப் பெற்றுள்ளது.குறுயிழை எபிதீயம் என்பது சில தூண்  எபிதீலியங்கள் ரோமங்கள் போன்ற  மென்மையான தன்மை கொண்ட  வெளி நீட்சிகளைப்  பெற்றுள்ளது. இவற்றை குறுயிழை  எபிதீலியம் என்று அழைக்கிறோம். இவற்றின் முக்கிய பணி , எபிதீலியத்தின் மீது ஒரு குறிப்பிட்ட திசையில்  துகள்கள் அல்லது  கோழைகளை நகர்த்துவது ஆகும். இது சுவாசக்குழாய், சுவாசப் பாதையின்  நுண்குழல்கள், சிறுநீரகக் குழல்கள் மற்றும்  அண்டக்குழல்களில் காணப்படுகிறது.



Discussion

No Comment Found