1.

மாளாத காதல் நோயாளன் போல்"" என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக

Answer»

மாளாத காதல் நோயாளன் போல் எனும் இத்தொடரில் உள்ள உவமையை இங்கு பார்க்கலாம்.

  • இங்கு உவமையாக நோயாளியை போல் என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது மருத்துவர் நோயாளிக்கு உடலில் ஏதாவது புண் ஏற்பட்டிருந்தால் அதை கத்தியால் அறுத்து சுட்டாலும் அதை நோயாளி தமக்கு நன்மை என்றே உணர்ந்து மருத்துவரை நேசிப்பார்.
  • அதேபோன்று இதை உவமையாக காட்டி பாடலாசிரியர் வித்துவக்கோட்டு எழுந்தருளியிருக்கும் அன்னையே மருத்துவரை போன்று நீ எனக்கு பல துன்பங்களை தந்தாலும் உனது அடியவனாகிய நான் நோயாளியைப் போலவே உன் அருளையே எப்பொழுதும் நான் எதிர்பார்த்து நிற்கின்றேன் என்பதாக தன்னுடைய பணிவை அழகிய ஊமையின் மூலம் சுட்டிக்காட்டுகின்றார்.
  • இதுவே இவ்வரிகளின் மூலம் உண்மையாக சொல்ல வருகின்ற செய்தியாகும்.


Discussion

No Comment Found