Answer» மாதவிடாய் சுழற்சியின் நிலைகள்- மாதவிடாய் நிலை, பாலிக்குலார் நிலை, அண்டம் விடுபடும் நிலை, லூட்டியல் நிலை முதலியன மாதவிடாய் சுழற்சியின் நிலைகள் ஆகும்.
அண்டகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் நிலை - முதல்நிலை பாலிக்கிள்கள் வளர்ச்சி அடைதல் நிகழ்கிறது.
பாலிக்குலார் நிலை - முதல்நிலை பாலிக்கிள்கள் வளர்ச்சி அடைந்து முதிர்ச்சியடைந்த கிராபியன் பாலிக்கிள்கள் உருவாதல் நிகழ்கிறது.
அண்டம் விடுபடும் நிலை - கிராபியன் பாலிக்கிள் வெடித்து அண்டம் விடுபடுதல் நிகழ்கிறது.
லூட்டியல் நிலை - காலியான கிராபியன் பாலிக்கிள் வளர்ச்சி அடைந்து கார்பஸ்லூட்டியமாக மாறுதல் நிகழும்.
கருப்பையில் நிகழும் மாற்றங்கள் மாதவிடாய் நிலை - கருப்பையின் எண்டோமெட்ரியத்தின் உட்சுவர் உரிந்து இரத்தப் போக்கு ஏற்படும்.
பாலிக்குலார் நிலை - பெருக்க நிலையினால் எண்டோமெட்ரியம் புத்தாக்கம் பெறுதல் ஏற்படும்.
அண்டம் விடுபடும் நிலை - எண்டோமெட்ரியத்தின் சுவர் தடிமனாக மாறும்.
லூட்டியல் நிலை - கருவுறுதல் முட்டையில் ஏற்படும்போது எண்டோமெட்ரியம் கருபதிவுக்கு தயாராகுதலும், ஏற்படாத போது கார்பஸ்லூட்டியம் சிதைந்து கருப்பையின் சுவர் உரிந்து கருவுறாத முட்டை இரத்தத்துடன் வெளியேறுதலும் நிகழும்.
|