1.

மையோடோம்கள் ----------------------- இல் காணப்படுகிறது.

Answer»

்கள்மையோடோம்கள் மீன்கள் இல் காணப்படுகிறது. மீன்கள் குளிர் இரத்தப் பிராணிகள் (POIKILOTHERMIC), நீர் வாழ் முதுகெலும்பிகள் ஆகும்.  மீன்கள் நீந்துவதற்கு ஏற்றவாறு தாடைகளைப் பெற்றுள்ளது. இதன் உடல் படகு போன்று அமைந்துள்ளது.இவை  தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக்  கொண்டு  காணப்படுகிறது. இந்த உயிரினத்திற்கு கழுத்துப் பகுதி இல்லை.இதில் இரு துடுப்புகள் காணப்படுகின்றன.அவை  இணைத் துடுப்பு மற்றும் நடுமையத் துடுப்புகளாகும். இவை நீந்திச் செல்வதற்கு பயன்படுகின்றன.மீன்களின்  உடல்  செதில்களால் மூடியுள்ளது. உடல் தசைகள் மயோடோம்கள் எனும் தசை துண்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டு உணர்ச்சி உறுப்புகள்  இவற்றில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. செவுள்கள் சுவாசத்திற்கு பயன்படுகிறது. 5 - 7 இணை செவுள் பிளவுகள் உள்ளன. இதயம்   இரு அறைகளைக் கொண்டுள்ளது.அவை ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் ஆகும் .இதேபோல்  தவளை ,பல்லி ,பாம்பு  போன்றவை குளிர் இரத்தப் பிராணிகளாகும்.



Discussion

No Comment Found