Answer» மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடும் பொருண்மையியல் கோட்பாடுகள்:- தொல்காப்பியம் ஆனது தமிழ் மொழியில் உள்ள அனைத்து சொற்களும் பொருள் உடையவை எனவும், பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும் சொல்லினாகும் எனவும் கூறுகிறது.
சசூர் - சசூர் என்ற மொழியியல் அறிஞர் சொல் மற்றும் பொருள் ஆகிய இரண்டுக்கும் இடையிலான உறவு இயற்கையானது அல்ல என வலியுறுத்துகிறார்.
ஃபுளும்பீல்டு - ஃபுளும்பீல்டு என்ற மொழியியல் அறிஞர் தூண்டல் செய்கைக்குத் எதிர்வினையாக அல்லது துலங்கலாக மொழி வெளிப்படுகிறது என்றுக் கூறுகிறது.
மாலினோவ்ஸ்கி மற்றும் பிர்த் - ஒரு சொல்லின் சூழலை அறிய முடியாமல், அந்த சொல்லின் பொருளை அறிய இயலாது என்று கூறுகிறார். இதனடிப்படையில் உணர்வு, மரபு, சூழல், பயன்பாட்டுக் கோட்பாடுகள் உருவாகின.
|