1.

மெல்லுடலிகளின் லார்வா பைபின்னேரியா ஆகும்.

Answer»

லிகளின் லார்வா பைபின்னேரியா ஆகும் -தவறு முட்தோ‌ல்களின் லார்வா பைபின்னேரியா ஆகும் . மெல்லுடலிகள் தொகுதி விலங்குலகத்தில் இரண்டாவது மிகப்பெரியத் தொகுதியாக விளங்குகிறது.இது நன்னீர் மற்றும் கடல்நீர் எனும் இரண்டு நீர் நிலைகளிலும் வாழும்தன்மைப் பெற்ற அதிக சிற்றினங்களைக் கொண்ட தொகுதியாகும் இவற்றிற்கு உடற்கண்டங்கள் இல்லை.மேலும் மென்மையான உடல் அமைப்பைப் கொண்டவை. தலை, தசையிலானப் பாதம் மற்றும் உள் உறுப்பு தொகுப்பு என உடல் மூன்றுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேன்டில் அறையினுள் காணப்படும் செவுள்கள் (டினிடியம்) (CTENIDIUM), அல்லது நுரையீரல் மூலமாகவோ அல்லது இரண்டின் மூலமாகவோ சுவாசித்தலை மேற்கொள்கின்றன. மெல்லுடலிகளின் லார்வா பொதுவாக ட்ரோக்கோஃபோர் (Trochopore LARVA) இளம் உயிரி மற்றும் வெலிஜர் இளம் உயிரி (Veliger Larva) ஆகும்.



Discussion

No Comment Found