1.

) MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் போதுஎன்ன நிகழ்கிறது?கரைதிறன் - வரையறு.

Answer»

மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரே‌ட்(MgSO_4.7H_2O)

  • ‌நீரே‌றிய உ‌ப்பான எ‌ப்ச‌ம் உ‌ப்பு அ‌ல்லது மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரே‌ட் (MgSO_4.7H_2O) யை மெதுவாக வெ‌ப்ப‌ப்படு‌த்து‌ம் போது அத‌ன் ஏழு ‌நீ‌‌ர் மூல‌க்கூறுகளை இழ‌ந்து நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டாக மாறுகிறது.  
  • (MgSO_4.7H_2O)MgSO_4 + 7H_2O
  • நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டை ‌கு‌ளி‌ர்‌வி‌க்கு‌ம் போது ‌மீ‌ண்டு‌ம் மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரே‌ட் எ‌ன்ற ‌நீரே‌றிய உ‌ப்பாக மாறு‌கிறது.  

கரைதிறன்

  • கரைதிறன் எ‌ன்பது ஒரு  குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடு அ‌ல்லது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100 கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரை பொரு‌ளி‌ன்  ‌கிரா‌ம்க‌ளி‌ன்  எண்ணிக்கை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  


Discussion

No Comment Found