1.

மனிதனின் உணவுப் பாதையை விவரி.

Answer»

் உணவுப் பாதை:வாய்: வாய் உணவுப் பாதையின் ஆரம்பத் தாடைச்சுரப்பி துவாரமாகும். இது வாய்க்குழிக்குள் திறக்கிறது. இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. உமிழ் நீர் சுரப்பிகள்: வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. இவை உமிழ்நீரை சுரக்கின்றன. நாக்கு: நாக்கு ஒரு தசையாலான உணர்ச்சி உறுப்பு ஆகும் இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது. தொண்டை: தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும். உணவுக்குழல் :22 செ.மீ நீளமுடைய தசைப்படலக்குழலாகும். தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை இயக்கம் மூலமாக கடத்துகிறது. இரைப்பை இது உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே ‘J‘ போன்ற வடிவத்தில் காணப்படும்  தசையாலான அகன்ற உறுப்பாகும். இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது.சிறுகுடல்இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாரும் பகுதிகளை உடையது. டியோடினம் என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். ‘C’ வடிவத்தில் காணப்படுகிறது. பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது. நடு சிறுகுடல் (அ) ஜூஜிணம் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும். பின்சிறுகுடல் (அ) இலியம் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும். கல்லீரல் உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி ஆகும். நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ் அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது. பெருங்குடல்: இது பின்  சிறு குடலிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது. இதனுடைய நீளம் சுமார் 1.5மீட்டர் ஆகும். இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை (1) முன் பெருங்குடல்(அ) சீக்கிம்  (ii) பெருங்குடல் (அ) கோலன் (III) மலக்குடல் (அ) ரெக்டம். சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை சீக்கம் ஆகும். சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும். மலக்குடல்: இது இறுதியாக மலவாயில் திறக்கிறது. மலவாய்: மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் மலச்சுருள் தசை உள்ளது. மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.



Discussion

No Comment Found