InterviewSolution
| 1. |
மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்கு சிறப்பு செய்தது ஏன்? |
|
Answer» இடைக்காடனார் என்ற புலவனுக்கு சிறப்பு செய்ததன் காரணம் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னன் குசேல பாண்டியன் ஆவார். இவர் புலமையில் சிறந்தவராக விளங்கினார். கபிலரின் நண்பராகிய புலவர் இடைக்காடனார் மன்னன் முன் கவிதைப்பாவினை பாடினார். ஆனால் மன்னன் பாடலை பொருட்படுத்தாமல் புலவர் இடைக்காடனாரை அவமதித்தான். இதனால் மனம் வருந்திய இடைக்காடனார் கடம்பவனக் கோயிலில் வீற்றிருந்த இறைவன் சிவனிடம் மன்னன் செய்ததை முறையிட்டார். இதனால் கோபம் கொண்ட சிவன் கடம்பவனக் கோயிலை விட்டு வெளியேறினார். வைகை நதி கரையருகே ஒரு கோயில் எழுப்பி அங்கு சென்று வீற்றிருந்தார். இதனை அறிந்த மன்னன் இறைவனை வேண்ட, இடைக்காடனாரை இகழ்ந்ததால் இந்த நிலை என்பதை அறிந்தான். தனது தவறை உணர்ந்த குசேல பாண்டியன் புலவர் இடைக்காடனாருக்கு சிறப்பு செய்தார். |
|