InterviewSolution
| 1. |
. மரம் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். |
|
Answer» நிலத்தடி நீர் பெருகுவதற்கு மரங்கள் உதவுமா? வறட்சியான காலங்களிலும் ஆறுகள் வற்றாமல் ஓடுவதற்கு அடிப்படையாக இருக்கும் காரணங்களுள் நிலத்தடி நீரோட்டம் ஒரு முக்கியமான அம்சமாகும். இதைத் தவிர்த்து, நிலத்தடி நீர் பெருகுவது என்பது மக்களுக்கு பெருமளவில் பலனளிக்க கூடியதாகும்; ஏனென்றால் இந்தியாவின் நிலத்தடிநீர் நிலையானது மிக மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. 2011ல் இந்தியாவில் ஏறக்குறைய 30% மாவட்டங்களில் நிலத்தடி நீரின் நிலையானது மோசமான அல்லது மிகவும் மோசமான நிலையிலோ உள்ளது. 1995ல் இது வெறும் 8% சதவீதமாக மட்டுமே இருந்தது. “இதே நிலை நீடிக்குமேயானால், அடுத்த 20 வருடங்களில் 60% அளவிற்கு இந்தியாவின் அனைத்து நீராதாரங்களும் ஒரு அபாயகரமான சூழலுக்கு தள்ளப்படும்” என்று உலக வங்கி அறிக்கை சொல்கிறது. இந்த நிலை மாறுவதற்கு உறுதியான நீர் பாசன முறைகள் மற்றும் மரங்கள் நடுவது ஆகிய அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மரங்கள் வெட்டப்படும்போது நிலத்தடி நீரின் அளவு குறைகிறது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பெங்களூரூவில் தின்ட்லு அல்லது டொடபோமசன்ட்ரா எனும் ஏரியானது அடர்ந்த மரம் செடி-கொடிகளால் சூழப்பட்டிருந்தது. மேலும் நல்ல நிலத்தடி நீர் வளமும் இருந்தது. ஆனால், வரிசையாக கட்டிடங்கள் வரத்துவங்கியதும் அங்கிருக்கும் மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான பறவைகளுக்கு வசிப்பிடமகாவும் இனப்பெருக்க புகலிடமாகவும் இருந்த அந்த ஏரி, இன்று முழுவதுமாக வறண்டு போய்விட்டது. அங்கிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 700 அடிக்கு கீழே சென்று விட்டது. |
|