1.

மூவிடப் பெயர்களையும் வினைகளையும் எடுத்துக்காட்டுடன் குறிப்பிடுக ?

Answer»

மூவிடப் பெயர்

மூவிடப் பெயரும் என்பது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியவற்றை குறிப்பதாகும்.

இதே போன்று வினைகளிலும் தன்மை, முன்னிலை படர்க்கை என்பது வரும்.

தன்மை என்பது தன்னை குறிக்கக்கூடிய ஒன்றாகும்.

தன்மை பெயருக்கு எடுத்துக்காட்டு நான், நாம் என்பது. ஒன்று தன்மை வினைக்கு எடுத்துக்காட்டு வந்தேன் வந்தோம்.

இரண்டாவதாக முன்னிலை அதாவது முன்னிலை என்பது தமக்கு முன் இருப்பதை குறிக்க கூடியதாகும்.

முன்னிலை பெயருக்கு எடுத்துக்காட்டு நீர், நீ, நீங்கள். முன்னிலை வினைக்கு எடுத்துக்காட்டு படி, செல், செல்லுங்கள் போன்றவையாகும். இதைத்தொடர்ந்து படர்க்கை என்பது மறைவானதை குறிக்கக் கூடியதாகும். படர்க்கை பெயருக்கு எடுத்துக்காட்டு அவர்கள், அவன் போன்றவை.

படர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு செய்வார்கள்,  படித்தான் போன்றவையாகும்.



Discussion

No Comment Found