InterviewSolution
| 1. |
நரம்பு மண்டலத்திற்கும், நாளமில்லா சுரப்பிமண்டலத்திற்க்குமிடையே இணைப்பாகச்செயல்படும் உறுப்பு எது? |
|
Answer» Answer: நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது நாளமில் சுரப்பிகள் (இலங்கை வழக்கு: கானில் சுரப்பிகள் அல்லது அகஞ்சுரக்கும் சுரப்பிகள், ஆங்கிலம்: ENDOCRINE glands) என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, நாளங்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும். இவை அகச்சுரப்பித் தொகுதி யின் அங்கங்களாகும். கூம்புச் சுரப்பி, கபச் சுரப்பி, கணையம், சூலகம், விந்தகம், கேடயச் சுரப்பி, இணைகேடயச் சுரப்பி, ஐப்போத்தலாமசு, அண்ணீரகச் சுரப்பி ஆகியன நம் உடலில் உள்ள முக்கிய நாளமில்லாச் சுரப்பிகள் ஆகும். கபச் சுரப்பி மற்றும் ஐப்போத்தலாமசு ஆகியவை நரம்புசார் நாளமில்லாச் (NEUROENDOCRINE) சுரப்பிகள் ஆகும். வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றங்கள் போன்ற உடற் தொழிற்பாடுகளை நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீர் கட்டுப்படுத்துகின்றது. இயக்குநீரின் அளவு கூடினாலோ குறைந்தாலோ நாளமில்லாச் சுரப்பி நோய்கள் உருவாகின்றன. Explanation: |
|