Answer» அணு எண்- ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்கள் எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் ஆகும்.
மோஸ்லேவின் நவீன ஆவர்த்தன விதி - 1912 ஆம் ஆண்டு பிரிட்டன் விஞ்ஞானி ஹென்றி மோஸ்லே தனிமங்களை ஆவர்ததன அட்டவணையில் வரிசைப்படுத்த சிறந்த அடிப்படையாக அணு எண் விளங்குவதை கண்டறிந்தார்.
- அணு எண்ணின் அடிப்படையில் நவீன ஆவர்த்தன விதியினை வெளியிட்டார்.
- அதன்படி அணு எண்களை சார்ந்து தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அமைந்து உள்ளது.
- நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படையில், அணு எண் அதிகரிப்பதற்கு தகுந்தாற்போல் தனிமங்கள் நவீன ஆவர்த்தன அட்டவணையில் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
- தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் 7 தொடர்கள் மற்றும் 18 தொகுதிகளாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
|