1.

ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?

Answer»

ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை

  • சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே ஒரு கற்றையில் அமைந்து காணப்படு‌ம் வா‌‌ஸ்குலா‌ர் க‌ற்றை ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை  ஆகு‌ம்.
  • இது இரு வகை‌ப்படு‌ம்.  

ஒருங்கமைந்தவை

  • இ‌ந்த வகை வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை‌யி‌ல் மைய‌ப்பகு‌தி‌யினை நோ‌க்‌கி சைலமு‌ம், வெ‌ளி‌‌ப்புற‌த்‌தினை நோ‌க்‌கி புளோயமு‌ம் அமை‌ந்து உ‌ள்ளது.  
  • திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை‌யி‌‌ல் சைல‌த்‌தி‌ற்கு‌ம் புளோய‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கே‌ம்‌பிய‌‌ம் கா‌ண‌ப்படு‌கிறது.
  • (எ.கா) இரு வித்திலைத் தாவர தண்டு.
  • சைல‌த்‌தி‌ற்கு‌ம் புளோய‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கே‌ம்‌பிய‌‌ம் காண‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் அ‌து மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • (எ.கா)  ஒரு வித்திலைத் தாவர தண்டு.

இருபக்க ஒருங்கமைந்தவை

  • வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கு வெளிப்பக்கமும் உள்பக்கமும் புளோயம் காண‌ப்படு‌ம் வா‌‌‌‌ஸ்குலா‌ர் க‌ற்றை இருபக்க ஒருங்கமைந்தவை ஆகு‌ம்.
  • (எ.கா குகர்பிட்டா)


Discussion

No Comment Found