Answer» சரியா தவறா- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம் ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை - சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே ஒரு கற்றையில் அமைந்து காணப்படும் வாஸ்குலார் கற்றை ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை ஆகும்.
- இது ஒருங்கமைந்தவை, இரு பக்க ஒருங்கமைந்தவை என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
ஒருங்கமைந்தவை - இந்த வகை வாஸ்குலார் கற்றையில் மையப்பகுதியினை நோக்கி சைலமும், வெளிப் புறத்தினை நோக்கி புளோயமும் அமைந்து உள்ளது.
- திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.
- (எ.கா) இரு வித்திலைத் தாவர தண்டு.
- சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படவில்லை என்றால் அது மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) ஒரு வித்திலைத் தாவர தண்டு.
|