1.

பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில்வளரும் தாவரங்கள் ____________எனப்படும்.

Answer»

பாலை வனப்பல்லுயிர்த்தொகுதிகளில்  வளரும் தாவரங்கள் பாலைவனத்தாவரங்கள்  எனப்படும்.

  • கண்டங்களின் மேற்கு விளிம்புகளில்  காணப்படுகின்ற பெரும்பாலான பகுதிகள் பாலை  வனப்பகுதிகள் ஆகும்.
  • 20° முதல் 30° வட, தென் அட்சங்களுக்கிடையே இப்பல்லுயிர்த்  தொகுதி காணப்படுகின்றன.
  • இங்கு ஆண்டுச்  சராசரி மழைப்பொழிவு 25 செ.மீட்டருக்கும் குறைவாக  உள்ளது. இதனால் மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும்  வறண்ட காலநிலையின் காரணமாக இங்குத் தாவரங்கள்  அரிதாக வளர்கின்றன.
  • இருப்பினும் இங்குக் காணப்படும்  தனித்துவம் வாய்ந்த தாவரங்கள் பாலைவனத் தாவரங்கள்  எனப்படுகின்றன.
  • இங்குக் காணப்படும் மண்  மணலாகவும், உவர்ப்பாகவும், உள்ளதால் விவசாயத்திற்கு  உகந்ததாக இல்லை .
  • வறட்சியைத் தாங்கக் கூடிய முட்புதர்கள்,குறுங்காடுகள்  மற்றும் பனை போன்ற  தாவரங்கள் இங்குக் காணப்படுகின்றன.                    
  • இங்கு வாழக்கூடிய  பழங்குடியின மக்கள் உணவு சேகரித்தல் மற்றும்  வேட்டையாடுதல் போன்ற தொழிலில்  ஈடுபட்டுள்ளனர்.
  • இவர்கள் மேய்ச்சல் நிலங்களைத் தேடி ஓரிடத்திலிருந்து  மற்றோரிடத்திற்கு இடம் பெயர்வர்.போக்குவரத்து இங்கு மிகவும் கடினமாக உள்ளதால்  ஒட்டகங்கள் போக்குவரத்திற்காகப்  பயன்படுத்தப்படுகின்றன.  



Discussion

No Comment Found