பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ராசமாணிக்கம் ஆகும்.
இவரது தந்தை துரைசாமி தாய் குஞ்சம்மாள்.
இவர் தனது தந்தை பெயரில் உள்ள துரையை எடுத்து தன் பெயரோடு சேர்த்து தம் பெயரை துரைமாணிக்கம் என்று மாற்றிக் கொண்டார்.
இவ்வாறு அவர் துரைமாணிக்கம் என்றே இயற்பெயர் ஆனது.
இவர் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தவர்.
தமிழுக்காகவே வாழ்ந்து மடிந்தவர்.
இவர் வாழ்ந்த காலம் இருபதாம் நூற்றாண்டு ஆகும்.
பாவலரேறு என்று தேவநேயப்பாவணரால் அழைக்கப்பட்டவர்.
பெருஞ்சித்தனார் அவர்கள் தம் மூச்சையும் பேச்சையும் உடல் உழைப்பையும் யாவற்றையும் தமிழுக்காகவே செலவு செய்வேன் என்ற தம் பாடல் வரிகளுக்கு இணங்க அவ்வாறே செலவு செய்து வாழ்ந்து காட்டியும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்காகவே வாழ்ந்த இவர் தமிழ் தேசத்தந்தை என்று போற்றப்படுகிறார்.