பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, கனிச்சாறு, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களாகும்.
உலகியல் நூறு என்ற தம் நூலில் ஆரம்பமாக உலகியல் எனத் தொடங்கி நாட்டியல் மாந்தவியல் பொதுவியல் பெண்ணியல் என 20 இயல்களில் இவை ஒவ்வொன்றினையும் 5 ஆக ஆக்கி மொத்தம் 100 தலைப்புகளில் 100 வெண்பாக்களை அமைத்திருக்கிறார்.
பெருஞ்சித்தனார் அவர்களால் இயற்றப்பட்டு அவர்களாலே உரையும் எழுதப்பட்ட நூல் தான் மகபுகுவஞ்சி என்ற நூல்.