1.

பொருத்துகஅ) நேர் நேர் நிரை - புளிமாங்கனி ஆ) நிரை நேர் நிரை - தேமாங்கனிஇ) நேர் நிரை நிரை - கருவிளங்கனிஈ) நிரை நிரை நிரை - கூவிளங்கனி

Answer»

பொருத்துதல்:

நேர் நேர் நிரை – தேமாங்கனி

நிரை நேர் நிரை – புளிமாங்கனி

நேர் நிரை நிரை –  கூவிளங்கனி

நிரை நிரை நிரை – கருவிளங்கனி

  • செய்யுளில் எழுத்து, அசை, சீர்,தளை, அடி,தொடை ஆகியவை அமைந்திருக்கும்.
  • அசை இரண்டு வகைப்படும். அவை நேரசை, நிரையசை

நேரசை

  • குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை

நிரையசை

  • இருகுறில் இணைந்தும், இருகுறில் இணைந்து ஒற்றடுத்தும்,
  • குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும்.
  • மூவசைசீரில் கடைசி அசை நிரையில் முடிவது கனி ஆகும்.  


Discussion

No Comment Found