1.

பொருத்துகஅ) நீ வந்தேன் - இட வழாநிலைஆ) நீ வந்தாய் - இடவழுஇ) நேற்று வருவான் - கால வழாநிலைஈ) நேற்று வந்தான் - கால வழு

Answer»

பொருத்துக:

நீ வந்தேன் என்பது இட வழு

  • நீ எனும் முன்னிலைப் பெயர் வந்தேன் எனும் தன்மை வினையைக் கொண்டு முடிவதால், இது இடவழு எனப்பட்டது.

நீ வந்தாய் என்பது இட வழாநிலை ஆகும்.

  • நீ வந்தாய் என்பது  இலக்கண முறையுடன் பிழையின்றி வந்துள்ளதால், இது  இட வழாநிலை எனப்பட்டது.  

நேற்று வருவான் என்பது கால வழுவாகும்.

  • நேற்று என்பது இறந்த காலத்தையும் வருவான் என்பது எதிர்காலத்தையும் குறிப்பதால் இது காலவழு எனப்பட்டது

நேற்று வந்தான் என்பது கால வழாநிலை ஆகும்.

  • நேற்று வந்தான் என்பது இலக்கண முறையுடன் பிழையின்றி வந்துள்ளதால், இது கால வழாநிலை எனப்பட்டது.  


Discussion

No Comment Found