1.

பெண் இனப்பெருக்க மண்டலத்திலுள்ளஅண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பைஆகியவற்றின் பணிகள் யாவை?

Answer»

ப்பெருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள்  :அண்டகங்கள்: அண்டகங்கள் என்பது பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். இந்த அண்டகங்கள் கீழ் வயிற்றுப் பகுதியில்  சிறுநீரகங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.இந்த  அண்டகங்கள் பெண் பாலின உயிரணு (கரு முட்டை அல்லது அண்டம் ) மற்றும் பெண் பாலின ஹார்மோன்களை (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான்) உற்பத்தி செய்கின்றன கர்பப்பை: ஒரு பேரிக்காய் போன்ற தசையாலான வெற்றிடமுள்ள அமைப்பைக் கொண்டது கர்ப்பப்பை ஆகும்.இது இடுப்புகளுக்கு இடைப்பட்ட குழியான பகுதிக்குள் அமைந்துள்ளது.மேலும் இந்த கர்ப்பப்பையானது, சிறுநீர்ப்பை மற்றும்  மலக்குடலுக்கு இடையே உள்ளது. கருப்பையின்  உள்ளே கருவானது வளர்ச்சி பெறுகிறது. கருப்பைவாய் (செர்விக்ஸ்) என்பது யோனிப் பகுதிக்குள் செல்லக்கூடிய கர்ப்பப்பையின் குறுகலான அடிப்பகுதி ஆகும்.



Discussion

No Comment Found