InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பின்வரும் பத்தியைப் படித்து பல்விடை வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக( கவனித்தல் திறன்)(5)சங்கநூல் பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை நூல்கள்.ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல் என்னும் பொருள் விறலியர், பாணர், கூத்தர், பொருநர் என்போர் தமது வறுமையைப் போக்க வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது அக்கால வழக்கம். அவ்வாறு பரிசு பெற்றுச் செல்லும் மேற்கூறிய நால்வகைப் பிரிவினருள் ஒருவன், பரிசு பெறச் செல்லும் இன்னொருவனை வழிப்படுத்தும் முறையில் அமைவதே ஆற்றுப்படை ஆகும். அகவற்பாக்களாக அமையும் இப் பாடல்கள் தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவதாக அமையும். திருமுருகாற்றுப்படையில் பாட்டுடைத் தலைவன் முருகக் கடவுள். இக்கடவுள் இருக்கின்ற இடங்கள், வழிபடும் முறைகள் ஆகியவற்றைக் கூறி முருகக் கடவுளின் அருளைப் பெறுவதற்கான வழிகள் இப்பாட்டில் கூறப்பட்டுள்ளன..இந்நூலுக்குப் புலவராற்றுப்படை என்னும் பெயரும் உண்டு.பொருநர் என்றால் புகழ்ந்து பாடுவோர் என்று பொருள். இவர்கள் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்று மூவகையினர். பொருநராற்றுப்படையில் போர்க்களம் பற்றிப் பாடப்பட்டுள்ளது.. யானையை மலையாகவும், அதன் மத நீரை அருவியாகவும் கற்பனை செய்து புலவர் பாடியமையால் மலைபடுகடாம் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்று கூறுவர்வினாக்கள் :-i) பொருநராற்றுப்படை எதனைக் குறித்து பாடப்பட்டுள்ளது?அ. வீரம் ஆ,நெற்களம் இ.போர்க்களம் ஈ.படைக்களம்ii) பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்கள்?அ. ஐந்து ஆ. ஆறு இ. ஏழு ஈ.மூன்றுiii) திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர்?அ. மலைப்படுகடாம் ஆ. புலவராற்றுப்படை இ. கூத்தராற்றுப்படை ஈ. முருகன் பாட்டுiv) ஆற்றுப்படை நூல்கள் எப்பாவகையால் இயற்றப்படும்?அ. கலிப்பா ஆ.வெண்பா இ.அகவற்பா ஈ,வஞ்சிப்பாv) யானையை உருவகித்து பெயர் பெற்ற ஆற்றுப்படை நூல் எது?அ. பொருநராற்றுப்படை ஆ,திருமுருகாற்றுப்படை இ. மலைப்படுகடாம் ஈ, திருக்குறள் |
|
Answer» Answer: neenga TAMIL nada nanu TAMILNADU STATE TENKASI district Prabhu |
|