1.

பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ்உறுப்பினர்களை மட்டும் கண்டறிக.(அ) மெல்லுடலிகள் (ஆ) துளையுடலிகள்(இ) குழியுடலிகள் (ஈ) முட்தோலிகள்

Answer»

ழ் உறுப்பினர்க‌ள்முட்தோலிகள் முட்தோலி  உயிரினங்கள் அனைத்தும் கடலில் வாழ்பவை. இத்தொகுதி இரு வகைகளை கொண்டுள்ளது.ஒன்று முதிர் உயிரிகள், அவை ஆரச்சமச்சீர் கொண்டணவைகளாகவும், இரண்டாவது இளம் உயிரிகள் (லார்வாக்கள்) இருபக்கசமச்சீர்  கொண்டவைகளாகவும் உள்ளன. இதில் உள்ள புறச்சட்டம் கால்சியம் தகடுகளாலும் (Calcareous OSSICLES), வெளிப்புற முட்களாலும்  மற்றும் நுண்இடுக்கிளாலும் (PEDICELLARIA) ஆக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாய்ப்பகுதி அடிப்புறத்தில் காணப்படுகிறது. இவ்வுயிரினங்களில் நீர் இரத்த ஓட்ட மண்டலம்  (water vascular system) காணப்படுவது இத்தொகுதியின் சிறப்பு பண்பாகும். இவை குழாய்கள் (Tube FEET)  மூலம் இடப்பெய‌ர்ச்சி செய்கின்றன.பொதுவாக இவ்வின உயிரிகளின் இளம் உயிரி (லார்வா)  (BIPINNARIA larva) – பைபின்னேரியா லார்வா எனப்படும்.



Discussion

No Comment Found