InterviewSolution
| 1. |
பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக. |
|
Answer» வடங்கள்:கணனியின் பல்வேறு பாகங்கள் இணைப்பு வடம் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்கு இணைப்புவடம் என்று பெயர். வகைகள் : 1. வி.ஜி.ஏ. - (Video Graphics Array) VGA 2. எச்.டி.எம்.ஐ. - (High Definition Multimedia Interface) HDMI 3. யு.எஸ்.பி. - (Universal Serial Bus) USB 4. தரவுக்கம்பி - (Data Cable) 5. ஒலிவடம் - (Audio Cable) 6. மின் இணைப்புக்கம்பி - (POWER Cord) 7. ஒலி வாங்கி இணைப்புக்கம்பி - (Mic cable) 8. ஈதர்நெட் இணைப்புக்கம்பி - (Ethernet Cable) யு.எஸ்.பி. (USB) இணைப்பு வடம் : அச்சுப்பொறி (printer), வருடி (SCANNER), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவைகள் கணினியுடன் இணைக்க பயன்படுகிறது. தரவுக்கம்பி (Data cable) இணைப்புவடம் : கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க தரவுக்கம்பி பயன்படுகிறது. மின் இணைப்பு வடம் (Power cord): மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது. |
|