InterviewSolution
| 1. |
பண்புத்தொகை என்றால் என்ன ? |
|
Answer» பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல்.[1] ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக, நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை, கருமை வடிவத்தைக் குறிக்குஞ் சொற்கள் - வட்டம், சதுரம். சுவையைக் குறிக்குஞ் சொற்கள் - இனிமை, கசப்பு குணத்தைக் குறிக்குஞ் சொற்கள் - நன்மை, தீமை எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும். எடுத்துக்காட்டுக்கள் (முறையே): வெண்கரடி = வெண்மை + கரடி வட்டக்கோடு = வட்டமான கோடு புளிச்சோறு = புளிக்கும் சோறு பெருங்கடல் = பெருமை (பெரிய) + கடல் மூவேந்தர் = மூன்று + வேந்தர் |
|